உள்ளூர் செய்திகள்

வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாரல் மழையால் உற்சாகம்

Published On 2023-07-02 05:00 GMT   |   Update On 2023-07-02 05:00 GMT
  • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  • வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர் சீசனை அனுபவிக்க அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்மரக்காடுகள், கோக்கர்ஸ் வாக் உள்பட பல்வேறு இடங்களில் மேக கூட்டங்களுக்கு இடையே இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி ஆகியவை முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழையில் சுற்றுலா பயணிகள் நனைந்தபடி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரியும், குதிரை சவாரி மேலும் சிலர் நடைபயிற்சி செய்தும் மகிழ்ந்தனர்.

பக்ரீத் பண்டிகை விடுமுறை, வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கொடைக்கானல் செண்பகனூர் பெட்ரோல் மையம் முதல் ஏரிச்சாலை வரை 6கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News