உள்ளூர் செய்திகள்

ஒப்பந்த பெண் தொழிலாளருக்கு பி.எஃப் வழங்கப்படாததை கண்டித்து பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-06 11:26 GMT   |   Update On 2022-08-06 11:26 GMT
  • பல ஆண்டுகளாக வேலை செய்யும் ஒப்பந்த பெண் தொழிலாளருக்கு பி.எஃப் வழங்கப்படாததை கண்டித்து பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 600-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு முறையாக ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பி.எஃப் தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் அதனால் அடிக்கடி நிறுவனத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

மேலும் இது குறித்து நிர்வாகத்திடம் கேட்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தை முற்றுகையிட்டு, வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பி.எஃப் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திரதாசன், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தொழிற்சாலைக்கு விரைந்து வந்து மனிதவள மேலாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News