கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு
- துறைத்தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்து பேசினார்.
- கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் துறையின் தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. 2-ம் ஆண்டு மாணவி ஷ்ரியா வரவேற்று பேசினார். துறை மன்றம் குறித்த தகவல்களை மாணவர் மலையரசு தொகுத்து வழங்கினார். கல்லூரி டீன் பரமசிவம் மற்றும் துறைத்தலைவர் வே.கலை வாணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சென்னை, காக்னி சன்ட் நிறுவனத்தின் மேலாள ரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான சுந்தர ராஜ பெருமாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக மாணவர் முத்துகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்தி பேசினார். துறைத் தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்த தகவல்கள் குறித்து பேசினார். இணையதள வடிவமைப்பாளருக்கான தகுதிகள் மற்றும் அந்த துறையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கான வழிமுறை கள் குறித்தும் சிறப்பு விருந்தினர் சுந்தர ராஜ பெருமாள் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்ப துறைகளிலும் தங்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். முடிவில் மாணவி பூர்ணிமா நன்றி கூறினார்.
கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல் மற்றும் முதல்வர் கே.காளி தாச முருகவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஒருங்கி ணைப்பாளர் ராம்பிரியா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.