உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2022-08-19 09:24 GMT   |   Update On 2022-08-19 09:24 GMT
  • இரு வாரங்களுக்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.
  • இரு சக்கர வாகனத்தையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பட்டுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா உத்தரவின்படி, இன்ஸ்பெ க்டர் ராஜேஷ்குமார் மற்றும் ஏட்டுக்கள் உமாசங்கர், ராஜேஷ், போலீசார் அருள்மொழி நவீன், அழகு, சுஜித் அடங்கிய தனிப்படையினர்பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனையை கண்காணித்து வந்தனர்.

இதில் பட்டுக்கோட்டை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ரிஷிகுமார் (வயது23) என்பவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததால் அவரை கைது செய்தனர்.

மேலும், இவர் இரு வாரங்களுக்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இரு சக்கர வாகனத்தையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பட்டுக்கோட்டை புறவழி ச்சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிலையம உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து வருவது கண்டு பெற்றோர்கள் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News