கோவில் பூசாரிகள் பேரவை ஆலோசனை கூட்டம்
- பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும்.
- பல பூசாரிகள் பயனடைந்து உள்ளனர்.
வடவள்ளி,
தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராம பூசாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதிய தொகை வழங்க வேண்டும். மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் படி பல பூசாரிகள் பயனடைந்து உள்ளனர். இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவாஜல சிவசுந்தர குருக்கள் கலந்து கொண்டார். கோவை மாவட்ட கோட்ட அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாணிக்கவாசகம், மேற்கு மண்டல இணை அமைப்பாளர் அருணாச்சலம், மேற்கு மண்டல அமைப்பாளர் வேலுச்சாமி, தொண்டாமுத்தூர் ஒன்றிய அமைப்பாளர் சாந்தலிங்கம், தொண்டாமுத்தூர் ஒன்றிய இணை அமைப்பாளர் முத்துக்குமார், சைவத் தலைவரும் திருப்பூர் தெற்கு அமைப்பாளர் சிவா ஆனந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், பூசாரிகள் பலர் கலந்து கொண்டனர்.