உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி அளித்த போது எடுத்தபடம்.

களக்காட்டில் தசரா திருவிழா: 10 அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி- பக்தர்கள் தரிசனம்

Published On 2022-10-06 07:11 GMT   |   Update On 2022-10-06 07:11 GMT
  • பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.
  • இந்த வருடம் 13-ம் ஆண்டு தசரா காட்சி நேற்று இரவில் வெகு விமர்சையாக நடந்தது.

களக்காடு:

களக்காட்டில் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் இருந்து வரும் சப்பரங்கள் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது.இந்த வருடம் 13-ம் ஆண்டு தசரா காட்சி நேற்று இரவில் வெகு விமர்சையாக நடந்தது.

இதையொட்டி களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன், பாரதிபுரம் உச்சினிமாகாளி அம்மன், மேலரதவீதி கற்பகவல்லி அம்மன், கோவில்பத்து துர்க்கா பரமேஸ்வரி அம்மன், கோவில்பத்து முப்பிடாதி அம்மன், விஸ்வகர்மா தெரு சந்தனமாரி அம்மன், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன், கழுகேற்றி முக்கு முப்பிடாதி அம்மன், கப்பலோட்டிய தமிழன் தெரு முப்பிடாதி அம்மன் கோவில்களில் இருந்து புறப்பட்டு வந்த 10 அம்மன் சப்பரங்களும் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் முன்பு ஒரே இடத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

இவர்களுடன் சத்தியவா கீஸ்வரர், கோமதி அம்மன், வரதராஜபெருமாளும் காட்சி கொடுத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News