உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பம் சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் உள்ள நியாய விலை கடை மூடி இருப்பதை படத்தில் காணலாம்

மாநிலத் தலைவர் மீது தாக்குதல் எதிரொலிகடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம்:பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-03-22 10:01 GMT   |   Update On 2023-03-22 10:01 GMT
  • சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று சென்று கொண்டிருந்தார்.
  • , மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கடலூர்:

சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் சிதம்பரம் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிதம்பரம் மானாசந்து பள்ளி அருகே சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட விற்பனையாளர்கள் முடிவு செய்தனர் 

அதன்படி ஏராளமான விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளையும் அடைத்தனர். தொடர்ந்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சிதம்பரம் சென்றனர். அங்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  மேலும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News