உள்ளூர் செய்திகள் (District)

கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


நத்தத்தில் மருத்துவ முகாமில் 70 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை

Published On 2023-08-10 06:12 GMT   |   Update On 2023-08-10 06:12 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் இலவச கண்மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • பல்வேறு கிராம பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் சுமார் 70 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர். அந்த முகாமை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு கிராம பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் சுமார் 70 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை முடிந்து நத்தம் திரும்பினர். அவர்களை ஒன்றியக்குழு தலைவர் ஆர். வி. என். கண்ணன் வரவேற்றார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் சின்ன கவுண்டர், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அவை தலைவர் சேக்ஒலி, மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லையா மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் குப்பான், அம்சவல்லி, செந்தில், ஆண்டிச்சாமி, மனோகரன் , கவுன்சிலர்கள் சிவா, விஜயவீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News