பொங்கல் பண்டிகையொட்டி மாடுகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை சூடுபிடித்தது
- 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும்.
- ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
சேலம்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து
கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து
வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள
வலசையூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, அடி மலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்கயிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.