உள்ளூர் செய்திகள்

தனுசின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை படத்தில் காணலாம்.

கொடைக்கானலில் நீர்த்தேக்கத்தில் விழுந்த வாலிபரை 3-ம் நாளாக தேடும் பணி

Published On 2023-08-08 05:33 GMT   |   Update On 2023-08-08 05:33 GMT
  • நகர்பகுதி யில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மேல்மலை கிராமமான பூண்டியில் தங்கியிருந்தனர்.
  • நீர்தேக்கத்தில் அவர்கள் சுற்றிபார்த்து கொண்டிருந்த போது தவறிவிழுந்த தனுஷ் நீரில் மூழ்கினார்.

கொடைக்கானல்:

சென்னை வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(25). இவர் சென்னை யில் தனியார் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். நகர்பகுதி யில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மேல்மலை கிராமமான பூண்டியில் தங்கியிருந்தனர்.

அங்கிருந்து கூக்கால் நீர்த்தேக்கம் செல்ல முடிவு செய்தனர். நீர்தேக்கத்தில் அவர்கள் சுற்றிபார்த்து கொண்டிருந்த போது தவறிவிழுந்த தனுஷ் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் கொடுத்த தக வலின்பேரில் கொடைக்கா னல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீர்தேக்கத்தில் பெரும்பகுதி சேறும் சகதியுமாக உள்ளதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதும் படகு மூலம் தீயணைப்பு த்துறையினர் நேற்று 2-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று 3-ம் நாளாக தனுஷ் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களுடன் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களும் களம் இறங்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் சகதி நிறைந்த தண்ணீரிலும் நீச்சல் அடித்து செல்லும் தன்மை கொண்டவர்கள்.

தனுசின் தந்தை சென்னை மற்றும் சேலத்தில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் தனுஷ் என்ற மகன் மட்டும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில் தனுசுக்கு பெண்பார்த்து வந்துள்ள னர். இந்நிலையில் நண்பர்க ளுடன் சுற்றுலா வந்த தனுஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News