உள்ளூர் செய்திகள் (District)

விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் தெப்ப திருவிழா

Published On 2023-09-18 08:26 GMT   |   Update On 2023-09-18 08:26 GMT
  • வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.

நீடாமங்கலம்:

வலங்கைமானில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத கடை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, கோவிலின் அருகே உள்ள குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

இதேபோல், இக்கோ விலில் பங்குனி மாதம் நடைபெறும் பாடைக்காவடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவின் போது விரதமிருந்த பக்தா்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நோ்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

நோயிலிருந்து குணமடைந்தவா்களை நெற்றியில் திருநீறு பூசி பச்சை பாடையில் படுக்க வைத்து உறவினா்கள் 4 போ் சுமந்து வந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்து கொடிமரத்தின் முன்பாக பாடைக்காவடி இறக்கி வைப்பர்.

பின்னர், பூசாரி பாடையில் படுத்திருப்ப வருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வாா். இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு அா்ச்சனை செய்து நோ்த்திக்கடனை நிறைவேற்றுவர்.

மேலும், ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்கஅலகுக் காவடிகள் உள்ளிட்ட பல்வேறு அலகுக்காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் வழிபடுவர். அன்று நடைபெறும் செடில் சுற்றும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர்.

Tags:    

Similar News