தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 20-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
தென்காசி:
தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரையில் திருவிழா நடைபெறுகிறது.
வீதி உலா
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 20-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி காலையில் யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் அம்பாள் தபசு காட்சி எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென்காசி ரத வீதியில் காசி விஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.