எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
- இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது
- 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் காவல்துறை தயார் நிலையில் இருந்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடந்தது.
இதனையொட்டி விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருதது.
சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.
காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் காளை விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின. தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளை களை, பார்வை யாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.