உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியர் இடமாற்றம் கண்டித்து பள்ளி முற்றுகை

Published On 2023-09-04 08:53 GMT   |   Update On 2023-09-04 08:53 GMT
  • பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
  • பல்வேறு சாதனைகள் செய்துள்ளார்

போளூர்:

போளூர் அடுத்த கசம்பாடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 147 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போளூர் அருகே உள்ள பூங்குளம்மேடு அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள், தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து கசம்பாடி அரசு பள்ளியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 5 வருடங்களாக பணியாற்றும் தலைமை ஆசிரியர் சரவணன் பள்ளியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார். பள்ளியின் தரம் உயர்ந்து தேர்ச்சி விகிதம் அதிகரித்ததோடு, மாணவர்களின் வருகை எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இதனால் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. இது தொடர்பாக மர்ம நபர்கள் சிலர் பொய்யான புகார் கொடுத்து, தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்துள்ளனர்.

எனவே தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் கசம்பாடி அரசு பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News