உள்ளூர் செய்திகள்

பொக்லைன் எந்திரம் மூலம் தெருவில் பள்ளம் தோண்டுவதையும், நோயாளிகளை அழைத்து செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நின்றிந்ததை படத்தில் காணலாம்.

குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2023-07-25 10:10 GMT   |   Update On 2023-07-25 10:10 GMT
  • ஆம்புலன்சில் மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்
  • பொதுமக்கள் வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குடிநீர் குழாய் அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் பஸ்கள் பாதி வழியிலேயே திரும்பி செல்வதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லும் நிலை உள்ளது.

இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் கூடுதல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அல்லது தச்சூர் வட்டார மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

எனவே பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நலன் கருதி குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News