உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை மலையில் நந்தி தீர்த்தத்தில் கொட்டும் தண்ணீர்

Published On 2023-09-28 09:10 GMT   |   Update On 2023-09-28 09:10 GMT
  • பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது
  • கனமழையின் காரணமாக ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து, தண்ணீர் கொட்டுகிறது. இந்த தண்ணீர், நந்தி வாயில் இருந்து கொட்டுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மலையில் உள்ள நந்தி தீர்த்தத்தில் தண்ணீர் கொட்டும் காட்சி பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளது.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலையில் பல அருவிகள் காணப்படும் நிலையில், நந்தி வாயிலிருந்து தண்ணீர் ஊற்றுவதை காண உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

Tags:    

Similar News