- கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில். அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட தலமாகும்.
- மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டி மலையடிவாரத்தில் ஆன்மீகச் செம்மல் ஆதிநாராயணன் சந்திர லீலா நினைவு நூலகம் திறக்கப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில். அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட தலமாகும். இன்று ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வருண கலச பூஜை நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மழை பொழியவும், நாடு செழிப்பு பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மலை உச்சியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மேலும் தோரணமலை கோவில் நிர்வாகத்தால் ஆன்மிகப் பணி மட்டுமன்றி பல்வேறுஅறப்பணிகளும் செய்து வரப்படுகிறது.மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெற வேண்டி மலையடிவாரத்தில் ஆன்மீகச் செம்மல் ஆதிநாராயணன் சந்திர லீலா நினைவு நூலகம் திறக்கப்பட்டது.நூலகத்தினை மருத்துவர் தர்மராஜ் திறந்து வைத்தார்.நூலகத்தில் ஆன்மிகம், சித்தர்கள், மருத்துவம், பொது அறிவு புத்தகங்கள், மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.