உள்ளூர் செய்திகள் (District)

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரெயில் கிணத்துக்கடவில் நின்று செல்லும்

Published On 2023-09-22 09:22 GMT   |   Update On 2023-09-22 09:22 GMT
  • தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் முக்கிய தகவல்
  • கிணத்துக்கடவில் நிறுத்தம் வேண்டும் என போராடிய ரெயில் பயணிகள் கோரிக்கை நிறைவேறியது

பொள்ளாச்சி,

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே பொள்ளாச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

செப்டம்பர் 25-ந் தேதி வரை ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் புறப்ப டும் ரெயில், திங்கள்கிழமை காலை மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் திங்கள்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பா ளையத்தில் இருந்து புறப்ப டும் ரெயில் செவ்வாய்கிழமை காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றட யும்.

வழியில் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கிளக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலியில் புறப்படும் ரெயில், பொள்ளாச்சிக்கு காலை 4.45 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 5.09 மணிக்கும் வரும். மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரெயில் கிணத்துகடவுக்கு இரவு 9.17 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.03 மணிக்கும் வந்தடையும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு, இந்த ரெயில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.

கிணத்துக்கடவில் நிறுத்தம் செய்ய வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். தற்போது கிணத்துக்கடவில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News