உள்ளூர் செய்திகள்

கணவாய்புதூர் கிராமத்தில் மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளை.

காளைகள் முட்டி 10 பேர் காயம்

Published On 2023-01-31 09:58 GMT   |   Update On 2023-01-31 09:58 GMT
  • வாணியம்பாடி கணவாய்புதூரில் மாடு விடும் விழா நடந்தது
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தில் 13-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைப்பெற்றது.

விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார்.

ஊர் கவுண்டர் தங்கவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

விழாவில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, குப்பம், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மீது காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து

நிர்ணியிக்கப்பட்ட இலக்கை அதிவேகமாக கடந்து சென்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் வருகை தந்து விழாவை கண்டு ரசித்தனர். பாதுகாப்பிற்காக வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News