ஆஞ்சநேயர் கோவிலில் வருடபூர்த்தி விழா
- கும்பாபிஷேகம் நடைபெற்றது
- பூ அலங்காரம் செய்து வழிபாடு
ஜோலார் பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கடந்த வருடம் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனால் ஒரு ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்று முடிந்த நிலையில் நேற்று வருட பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூ அலங்காரமும் செய்தனர்.
இதனை தொடர்ந்து காலை 7 மணியளவில் கோ பூஜை தேவதா அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, நடந்தது. 8.30 மணிக்கு மகா பூர்ணாஹீதி, தீபாராதனையும் வெற்றி விநாயகர், காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர், கலசாபிஷேகமும், இதனையடுத்து ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மகா அபிஷேகமும் நடைபெற்றது.
விழாவில் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி. குமரேசன், கிளாசிக் கோவை அன்பு மற்றும் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.