பீட்சா, புரோட்டா, பர்கர் சாப்பிட கூடாது
- திருப்பத்தூர் கலெக்டர் அறிவுரை
- இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர்ரோட்டரி சங்கம், சென்னை ஜெம் மருத்துவமனை- இணைத்து நடத்தும் இலவச மெகா மருத்துவ ஆலோசனை முகாம் திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
மருத்துவ முகாமை கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், சென்னை ஜெம் மருத்துவமனை இயக்குனரும், குடல்நோய் மருத்துவ நிபுணர், டாக்டர் பி.செந்தில்குமார், முகமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-
நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய திணை ராகு சாமை, கேழ்வரகு போன்ற உணவுகளை பயன்படுத்த வேண்டும் துரித உணவான பீட்சா, பர்கர், புரோட்டா போன்றவற்றை உணவுகளை தவிர்க்க வேண்டும் சரியான உணவு, உடற்பயிற்சி தூக்கம், ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டால் மருத்துவமனைக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்கலாம் என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை, குடல் சம்பந்தமான நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.