உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் எலிகள் தொல்லை

Published On 2023-11-25 07:35 GMT   |   Update On 2023-11-25 07:35 GMT
  • நோயாளிகள் அதிர்ச்சி
  • வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

இந்த ஆஸ்பத்திரிக்கு வாணியம்பாடி நகர மக்கள் மட்டுமின்றி கிராம புறங்களில் இருந்தும் நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஊசி போடும் அறை மற்றும் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள வார்டுகளில் எலிகள் சுற்றி திரிகிறது.

மேலும் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை தின்பது, கடிப்பது உள்ளிட்ட செயல்களால் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அறு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நாளுக்கு நாள் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சைக்கு வந்த ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து அரசு ஆஸ்பத்திரியில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News