எல்.இ.டி. திரையின் மூலம் பொதுமக்கள் சான்றுகள் பார்த்துக் கொள்ளும் வசதி
- விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்
- பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
வாணியம்பாடி:
வாணியம்பாடி தாலுகா விலேயே முதல் முறையாக பொதுமக்களே நேரடியாக பட்டா சிட்டா வை கணினி மூலம் பார்த்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா, நிம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்யும் இணைய வழிச் சான்றுகள், பட்டா மாறுதல் கோப்புகள் மற்றும் இ-அடங்கல் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து சான்றுகள் தொடர்பாக பொது மக்களிடம், விவசாயிகளிடம், விழிப்புணர்வு வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைய ஏற்படுத்தும் விதமாக நிம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் (விஏஓ) முதல் முறையாக எல்.இ.டி. மூலம் நேரடியாக திரையில் பார்த்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் இணையவழி சான்றுகள் மற்றும் இ-அடங்கல் பதிவுகளின் பரிந்துரையை நேரடியாக பார்க்கலாம், அதன் மூலம் அதன் பின்னர் உரிய சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை நிம்மியம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் சற்குணக்குமார் செய்துள்ளார், இவரின் இந்த பணிக்கு பொதுமக்கள் விவசாயிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.