உள்ளூர் செய்திகள்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்கம்
- ரூ.2½ லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது
- நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்
திருப்பத்தூர்:
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்ட மூலம் 15 வயது முதல் 40 வயது வரை அப்பகுதியில் படிக்காத பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தன்னார்வ ஆசிரியர்கள் மூலம் பாடம் கற்பிக்கும் திட்டமாகும்.
இந்த திட்டம் திருப்பத்தூர் டவுன் 36-வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் மற்றும் ரூ.2½ லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் க.சக்கரவர்த்தி, தலைமை தாங்கினார். அனைவரையும் ஆசிரியர் ஸ்ரீ ரஞ்சனி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி கவுன்சிலர் மு. வெற்றிகொண்டான் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் வழங்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களை வழங்கியும் தண்ணீரை திறந்து வைத்து பேசினார்.