உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் மீண்டும் பாரா கிளைடிங்

Published On 2023-09-12 09:20 GMT   |   Update On 2023-09-12 09:20 GMT
  • ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்
  • கலெக்டர் தகவல்

திருப்பத்தூர்:

ஏலகிரி மலையில் வெளிநாட்டில் இருந்து வீரர்களை அழைத்து 'பாராகிளைடிங்' என்ற பறவை போல பறந்தபடி இயற்கையை ரசிக்கும் வசதி கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் இந்த சாகச விளையாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் பிறகு 'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்களும், வானத்தில் பறந்து பரவசமடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு பறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

'பாராகிளைடிங்' தெரியாத சாதாரண மக்கள் பங்கேற்க விரும்பினால் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

தகுந்த விமானியுடன் இவர்கள் பறக்க முடியும். மலை மேட்டுப்பகுதியில் இருந்து பாராகிளைடிங் செய்து, சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் பறந்து இயற்கை அழகை, கழுகு பார்வையில் ரசிக்கலாம்.

பறக்க தொடங்கும் இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஆஞ்ச நேயர் கோவில் அருகே 5 ஏக்கர் நிலத்தில் தரை இறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகள் மத்தியில் பாராகிளைடிங் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சில ஆண்டுகளில் முடக்கப்பட்டது. தற்போது

பாராகிளைடிங் சாகச பயிற்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து மீண்டும் பாரா கிளைடிங் தொடங்க ஆயத்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

ஏலகிரி மலையில் அனைத்து வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சுற்றுலா நிதி திட்டத்தில் கோடை விழா அரங்கம் உள்ளிட்டவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்களை சேர்ந்த மக்களின் கனவாக இருக்கும் ஏலகிரி மலையில், விண்ணில் பறக்கும் பாராகிளைடிங் வசதி மீண்டும் தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் ஏலகிரி மலையில் பறக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெறும்' என்றார்.

Tags:    

Similar News