நாட்டறம்பள்ளி பகுதியில் நடனம் ஆடிய பாம்புகள்
- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.
- தீயணைப்புத்துைறயினர் பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே இரண்டு பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27) இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மாலை 2 பாம்புகள் பின்னி விளையாடி க்கொண்டிருந்தன. இதனை கண்ட பூபதி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது 2 பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்ததை கண்டு சுமார் அரை மணி நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு பாம்புகள் தனித்தனியாக பிரிந்து சென்றது. பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பு பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
மேலும் அப்பகுதி இளைஞர்கள் இரண்டு பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.