உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களையும் கைது செய்யப்பட்ட  நாகர்ஜுனை படத்தில் காணலாம்.

திருப்பூரில் 176 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2023-04-08 10:11 GMT   |   Update On 2023-04-08 10:11 GMT
  • காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
  • இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

திருப்பூர் :

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதி உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப ட்டனர்.அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குட்கா புகையிலை பொருட்களை எடுத்து சென்று விற்பனையில் எடுபட்டது தெரிய வந்தது.தொடர்ந்து வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் ராம்நகர் குடோனில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதாக கூறியதை தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 176 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த ராகவன், நாகர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News