உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அருகில் மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினித் ஆகியோர் உள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 மாணவர்கள் இன்று வீடு திரும்புகின்றனர்

Published On 2022-10-10 11:10 GMT   |   Update On 2022-10-10 11:10 GMT
  • மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், ரசம் சாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • மாணவர்களுக்கு சிலர் வயிற்றுப்போக்கும், மயக்கமும் அடைந்துள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் அருகே உள்ள அவினாசி ரோட்டில் பூண்டி ரிங் ரோட்டில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த சேவாலயத்தில் ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மாணவர்கள் மற்றும் சிலர் தங்கி வருகிறார்கள். இதில் மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், ரசம் சாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்டு மாணவர்களுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி ஏற்பட்டுள்ளது. சிலர் வயிற்றுப்போக்கும், மயக்கமும் அடைந்து ள்ளனர். இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் இதில் 10-ம் வகுப்பு மாணவன் மாதேஷ் (15), 6-ம் வகுப்பு மாணவன் பாபு (13), 4-ம் வகுப்பு மாணவன் ஆதிஷ் (8) ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும், வாந்தி, மயக்கத்துடன் வெள்ளகோவிலை சேர்ந்த தரணீஸ் (11), திருப்பூரை சேர்ந்த கவுதம் (17), நெல்லையை சேர்ந்த சபரீஸ் (10), திருப்பூரை சேர்ந்த குணா (9), திருப்பூரை சேர்ந்த சதீஸ் (8), பொங்கலூரை சேர்ந்த ரித்தீஸ் (7), சின்னாண்டிபாளையத்தை சேர்ந்த அர்சத் (8), மதுரையை சேர்ந்த பிரகாஷ் (11), திருப்பூரை சேர்ந்த கவின்குமார் (13), ஸ்ரீகாந்த் (12), மணிகண்டன் (15) மற்றும் காப்பக காவலாளி ஜெயராமன் (63) ஆகிய 12 பேர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் பூரண சிகிச்சை பெற்ற நிலையில் 6 பேர் வீடு செல்ல விருப்பம் தெரிவித்ததன் காரணமாக 6 பேர் வீடு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது என டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

திருப்பூர் அவிநாசி ரோடு திருமுருகன் பூண்டியில் உள்ள காப்பகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அருகில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News