தமிழ்நாடு

நிலம் கையகப்படுத்தும் பணி.. வஜ்ரா வாகனத்துடன் போலீசார் குவிப்பு

Published On 2024-11-17 03:22 GMT   |   Update On 2024-11-17 03:22 GMT
  • வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக வஜ்ரா வாகனத்துடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News