தமிழ்நாடு
வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு- உணவு விநியோகித்த நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம்
- வந்தே பாரத் ரெயிலில் கொடுத்த சாம்பாரில் வண்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ரெயில்வே அதிகாரிகள் பயணியிடம் மன்னிப்பு கேட்டனர்.
நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணித்த பயணிகளுக்கு கொடுத்த சாம்பாரில் வண்டுகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாம்பாரில் வண்டுகள் இருந்தது தொடர்பாக பயணி புகாரளித்தபோது அது 'சாம்பாரில் போடும் சீரகம்' என ரெயில்வே அதிகாரிகள் புது விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து சக பயணிகளும் சாம்பாரில் இருந்தது வண்டு தான் என உறுதிப்படுத்தியதை அடுத்து அவர்கள் பயணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் வண்டுகள் இருந்த உணவை விநியோகம் செய்த பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு தெற்கு ரெயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.