உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

விடுமுறை தினத்திலும் போட்டி தேர்வு மாணவர்கள் படிக்க உதவும் நூலகம்

Published On 2022-11-29 06:15 GMT   |   Update On 2022-11-29 06:15 GMT
  • காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை படித்து வருகின்றனர்.
  • குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

உடுமலை :

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேரகிளை நூலகம் எண் இரண்டில் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் போட்டி தேர்வு நூல்களும் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தியும் அவர்கள் கொண்டுவரும் நூல்களையும் மாணவர்கள் அனுதினமும் படித்து வருகின்றனர்.

இதில் அனுதினமும் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு படித்து வருகின்றனர். காலை 8 மணிக்கு நூலகம் திறக்கும் போது வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை உணவு கொண்டு வந்து அங்கேயே உணவருந்தி படித்து வருகின்றனர். குரூப் 2 தேர்வில் 11 பேர் வெற்றி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் விடுமுறை நாட்களிலும் நூலகத்தை பயன்படுத்தும் வகையில் நூலகர்கள் நூலகத்தை திறந்து மாணவர்கள் நூலக போட்டித் தேர்வு அறைகளை பயன்படுத்த அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு போட்டித் தேர்வு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News