உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கிய காட்சி.

பல்லடத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-07-11 06:52 GMT   |   Update On 2023-07-11 06:52 GMT
  • அ.தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமையில் நடைபெற்றது.
  • புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர்களுக்கு சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,தலைமையில் நடைபெற்றது. பல்லடம் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், அவைத் தலைவர் சிவாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் கேத்தனூர் அரிகோபால் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் நகரம், பல்லடம் வடக்கு, தெற்கு, ஒன்றியங்கள், பொங்கலூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News