உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா தொடக்கம்

Published On 2022-11-25 07:02 GMT   |   Update On 2022-11-25 07:02 GMT
  • வட்டார அளவில் 29ந்தேதி முதல், மாவட்ட அளவில் டிசம்பா் 6ந் தேதி முதல், மாநில அளவில் ஜனவரி 1ந் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.
  • மாநில அளவில் வெற்றி பெற்று தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

திருப்பூர்:

அரசுப் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தி அவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலைப் பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

போட்டிகளில் 6 முதல் 9, 9 முதல் 10, 11 முதல் 12ம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக நுண்கலை, கவின் கலை, நடனம், நாடகம், வாய்பாட்டிசை, கருவி இசை, மொழித்திறன், இசை சங்கமம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

பள்ளி அளவில் போட்டிகள் தொடங்கி உள்ளது.வட்டார அளவில் 29ந்தேதி முதல், மாவட்ட அளவில் டிசம்பா் 6ந் தேதி முதல், மாநில அளவில் ஜனவரி 1ந் தேதி முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.

இதில் வெற்றி பெறும் மாணவா்கள் அடுத்தகட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவாா்கள். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பரிசு, சான்றிதழ் மற்றும் கலையரசன் மற்றும் கலையரசி ஆகிய விருதுகள் வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெற்று தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள். இந்த போட்டிகள் திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News