உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவு

Published On 2022-10-26 10:33 GMT   |   Update On 2022-10-26 10:33 GMT
  • திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
  • தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர்.

திருப்பூர் :

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் திருப்பூரில் ஹோட்டல்கள் நடத்திய வருகிறார்கள். தற்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இதுபோல் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பாத நிலையில் அவர்கள் குழந்தைகள் பல பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை குறைந்தது. பள்ளி வகுப்பறைகள் பலவும், மாணவ- மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News