உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தனியார் ஈமு நிறுவன சொத்துக்கள் ஏலம் 4-ந் தேதி நடக்கிறது

Published On 2023-04-18 04:24 GMT   |   Update On 2023-04-18 04:24 GMT
  • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தினை 2.5.2023 அன்று மாலை 5மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வந்த சிவா ஈமு பார்ம்ஸ் என்றநிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட திருப்பூர் தெற்கு வட்டம்,நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள நிலம் அதில் 494 சதுர மீட்டர் பரப்பளவுள்ள கட்டடம்,203.32 சதுர மீட்டர் பரப்பளவுள்ள சிமெண்ட் சீட் கட்டிடம் மற்றும் 5 ஆழ்துழாய்கிணறுகள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997-ன் கீழ்தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.5.2023அன்று முற்பகல் 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்.240) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படஉள்ளது.

மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏலநிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சார்ஆட்சியர் அலுவலகம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம்உள்ளவர்கள் கலந்து கொள்ளவும் , நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படிஅசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும் எனவும்தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவ விண்ணப்பத்தினை 2.5.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.  

Tags:    

Similar News