கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் - கால்நடை வளர்ப்போர் கோரிக்கை
- விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
பல்லடம் :
பல்லடம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் பகுதி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் சாணத்தை இயற்கை விவசாயத்திற்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் வறட்சி ஏற்பட்டு கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.ஆண்டுதோ றும் மார்ச்,ஏப்ரல்,மே,ஆகிய மாதங்களில் வறட்சி ஏற்படும் என்பதால் கால்நடைத்துறையினர் தீவனத்தை மானிய விலையில் கால்நடைகளை வளர்ப்போருக்கு வழங்குவார்கள். இதன்படி 1 மாட்டுக்கு தினமும் 3 கிலோ வீதம் வாரத்துக்கு 21 கிலோ தீவனம் வழங்கப்ப ட்டது.குறிப்பாக 4 முதல் 5 தீவன வங்கிகள் அமைக்க ப்பட்டு, சோளத்தட்டு, வைக்கோல் உள்ளிட்ட உலர் தீவன ங்களும் மானிய விலையில் வழங்கப்பட்டன.
இதனால் பால் உற்பத்தி பாதிக்க ப்படாமல் தடுக்கப்பட்டது டன் கால்ந டைகளை அடிமாடுகளாக விற்பனை செய்வதும் குறைந்தது.அந்த வகையில் தற்போது கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.