உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஸ்ரீ ரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் சேதம் - இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம்

Published On 2023-08-06 06:11 GMT   |   Update On 2023-08-06 06:11 GMT
  • கோபுரம் தொடா்பாக எச்சரித்தும் இந்து சமய அறநிலையத் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • கோபுரத்தை சீரமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பூர்:

ஸ்ரீ ரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் சிதிலமடைந்து விழுந்ததற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியமே காரணம் என இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

வரலாற்று சிறப்பு மிக்கதும், பழைமையானதுமான ஸ்ரீ ரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரம் சிதிலமடைந்து விழுந்ததற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியமே காரணமாகும். கோபுரம் சிதிலமடைந்தது தொடா்பாக இந்து முன்னணி, ஆன்மிகப் பெரியவா்கள் எச்சரித்தும் இந்து சமய அறநிலையத் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, கோவிலில் நிகழ்ந்துள்ள அசம்பாவிதத்துக்கு தக்க பரிகாரம் செய்யவும், கோபுரத்தை சீரமைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News