உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

இணையதளம் மூலம் பட்டா மாற்றம் செய்ய எளிய வசதி

Published On 2023-01-26 10:22 GMT   |   Update On 2023-01-26 10:22 GMT
பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையதளம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம். இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையதளம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலமாக செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தின் நிலையை அறிய https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டா மாறுதல் மனுவின் நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பட்டா மாறுதலின் நடவடிக்கையின்போது ஒவ்வொரு நிலையையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.

பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா, புலப்பம், அபதிவேடு ஆகியவற்றை https://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக கட்டணமில்லாமல் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News