உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

மானியத்தில் பழச்செடிகள் வாங்கி பயன்பெறலாம்

Published On 2023-06-16 04:30 GMT   |   Update On 2023-06-16 04:30 GMT
  • அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
  • விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

திருப்பூர் :

தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 7 அரசு கல்வி நிலையங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் தோட்டம் அமைக்க ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. 5 வகையான பழச்செடிகள் கொண்ட தொகுப்புகள் 75 சதவீதம் மானியத்தில் ஒரு தொகுப்பு ரூ.50-க்கு வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.50 மானியம் 6 எண்ணிக்கைக்கு வழங்கப்பட உள்ளது. ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களில் ஊடு பயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும், வாழை மற்றும் மரவள்ளியில் ஊடுபயிராக காய்கறிகள் பயிர் செய்யும் விவசாயிகளுக்கும் விதை மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

தோட்டக்கலை உபகரணங்களை நெகிழிக்கூடைகள் 40 சதவீத மானிய விலையில் 80 அலகு வழங்கப்பட உள்ளது. மாடித்தோட்ட தொகுப்புகள் 50 சதவீத மானியத்தில் தொகுப்பு ரூ.450-க்கு 250 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் பழச்செடி தொகுப்புகள் மற்றும் மாடித்தோட்ட தொகுப்புகள் திட்டத்–தில் பயன்–பெற www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், மற்ற திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News