உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சாலைகளில் கான்கிரீட் கலவைகள் கொட்டினால் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை

Published On 2023-01-01 04:53 GMT   |   Update On 2023-01-01 04:53 GMT
  • ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுகிறது.
  • ரெடி மிக்ஸ் கான்கிரீட் கலவை ஆலை உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் கலவை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கட்டுமானங்கள் நடைபெறும் கட்டிடங்களுக்கு லாரிகள் மூலம் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் போது சாலைகளில் ஜல்லிக்கற்கள் சிதறுவதால் சாலைகளில் செல்வோர் சறுக்கி விழுந்து ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பெருந்தொழுவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் கலவை ஆலை உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமை தாங்கினார். பெருந்தொழுவு ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், தொங்குட்டிபாளையம் ஊராட்சி தலைவர் பிரியா நடராஜன் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் பேசும்போது, ரெடி மிக்ஸ் கான்கிரீட் உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் இந்த பிரச்சனையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுகிறது. இனிமேல் இதுபோன்று சாலையில் ஜல்லிக்கற்கள் சிதறுவது நடைபெற்றால் ரெடிமிக்ஸ் கலவை ஆலை உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இனிமேல் ரெடிமிக்ஸ் கலவைகள் சாலையில் சிதறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை ஆய்வாளர், ஊராட்சி துணைத் தலைவர்கள் சிவகாமி ராஜேஷ்குமார், பத்மாஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News