உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்ற காட்சி.

மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி - பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-08-29 06:03 GMT   |   Update On 2022-08-29 06:03 GMT
  • ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

திருப்பூர் :

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் ரத்னா முன்னிலை வைத்தார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வரவேற்றார்.

ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதனை போக்குவரத்து அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.நஞ்சப்பா பள்ளி சாலை முன்பு நிறுத்தும் அதிகப்படியான வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல், பள்ளியில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து, இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்கள் அடையாளம் கண்டு அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர் கல்லூரியில் சேர உரிய ஆலோசனை மற்றும் உதவிகளை செய்தல், நீட், சட்டப்படிப்பு, சி.ஏ., போன்ற உயர் படிப்புகளுக்கு உரிய ஆசிரியர்களை நியமித்து மாணவிகளுக்கு தக்க பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்தும் மாணவிகளுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலாண்மைக்குழு உறுப்பினர் 17 பேர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News