உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து 24-ந்தேதி மறியல் போராட்டம் - ஏ.ஐ.டி.யு.சி., அறிவிப்பு

Published On 2022-12-16 07:14 GMT   |   Update On 2022-12-16 07:15 GMT
  • அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
  • கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், அரசு வெளியிட்டுள்ள அரசாணை 152-ன்படி சுகாதார பணியாளர்களை அரசு தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி மாவட்டத்தில் திருப்பூர் மாநகரம், அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கவர்னரின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. யின் சார்பில் 500 தொழிலாளர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News