உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

காய்கறி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்க மானியம்

Published On 2022-09-13 12:00 GMT   |   Update On 2022-09-13 12:00 GMT
  • விவசாயிகள் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் பயிரிட்டு வருகின்றனர்.
  • விவசாயிகள் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் பயிரிட்டு வருகின்றனர்.

மடத்துக்குளம்:

உடுமலை,மடத்துக்குளம் வட்டாரத்தில் காய்கறி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்க தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார்கூறியதாவது:-

மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, மிளகாய் என தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்வதோடு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும்ஆர்வம் காட்டி வருகின்றனர்.நுண்ணீர்ப்பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் நிலப்போர்வை அமைத்து காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் பயிரிட்டு வருகின்றனர்.

நிலப்போர்வை என்பது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலிதீன் ஷீட்கள், மெல்லிய காகிதம்போன்றதாகும்.நிலத்தில் போர்வை போல பரப்பி துளையிட்டு அங்கு மட்டும் நாற்றுக்களை நடவு செய்து நல்ல பயிர் வளரும் சூழலைஉருவாக்கலாம்.அதிலும் தக்காளி மிளகாய் மற்றும் தர்பூசணி பயிர்களுக்கு நிலப்போர்வை நல்ல பலன் தருகிறது.மேலும் நீண்ட கால பயிர்களான வாழை, பப்பாளி, மா, கொய்யா போன்றபழ மரப்பயிர்களுக்கும் நிலப்போர்வை அமைத்து பயிர் செய்வதால் நல்ல பலன் கிடைக்கிறது.அனைத்து விதமான மண்ணிலும் களைகள் வளரும். அதனை தடுக்கும் சிறந்த முறையே மல்சிங் ஷீட் தொழில்நுட்பமாகும்.மேலும் நீர் ஆவியாவதை தடுத்தல், மண்ஈரம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவது, மண்ணில் உள்ள உப்பு மேல் நோக்கி வருவது தடுத்தல், இரவு மற்றும் குளிர்காலத்தில் கூட மண்ணில் சீரான வெப்பத்தை நிலைநிறுத்தி பயிர் சிறந்து வளர்வதற்கும், முளைவிடும் தன்மையை துரிதப்படுத்துவதற்கும், தாவரங்களில் அதிகஅளவு ஒளிச்சேர்க்கைநடக்கிறது.

காய்கறிப்பயிர்களுக்கு ஒரு முறை நிலப்போர்வைகள் அமைத்தால் 3 அல்லது 4 முறை பயிர் சாகுபடிக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம்.காய்கறி மற்றும் குறுகிய கால சாகுபடிக்கு 2,5-30 மைக்ரான் அளவுள்ளபாலிதீன் ஷீட்டும், நீண்ட கால வயதுடைய மரக்கன்றுகள் சாகுபடிக்கு 50-100 மைக்ரான் பாலிதீன்ஷீட்கள் பயன்படுத்த வேண்டும்.2022 - 23ம் நிதியாண்டில், மடத்துக்குளம் வட்டாரத்திற்கு காய்கறிப் பயிர் சாகுபடி செய்வதற்கான நிலப்போர்வைகள் வழங்கப்பட உள்ளது.

ஒரு ஹெக்டருக்கு 16 ஆயிரம் வீதம் 10 ஹெக்டருக்கு, 1.60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு, துங்காவி குறு வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் குறு வட்ட விவசாயிகள் நித்யராஜ் 63821 29721 என்றஎண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Tags:    

Similar News