உள்ளூர் செய்திகள்

எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்ற காட்சி.


வெள்ளகோவிலில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

Published On 2022-10-12 07:32 GMT   |   Update On 2022-10-12 07:32 GMT
  • 178 பேருக்கு எண்ணும் எழுத்தும் ஆசிரிய பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
  • கடந்த கல்வி ஆண்டுகளில் கொரோனா காலகட்டங்களில் பள்ளி குழந்தைகளின் வருகை குறைவாக இருந்தது.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், தலைமை ஆசிரியர் என மொத்தம் 178 பேருக்கு எண்ணும் எழுத்தும் ஆசிரிய பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டுகளில் கொரோனா காலகட்டங்களில் பள்ளி குழந்தைகளின் வருகை குறைவாக இருந்தது. தற்போது இந்த கல்வியாண்டில் மாணவ மாணவிகளின் வருகையை அதிகப்படுத்துவதற்காகவும், கற்றல் திறனை 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அதிகப்படுத்த துணை கருவிகள் மூலம் ஆடல் பாடல், நடனம், விளையாட்டு, கரும்பலகை, செய்தித்தாள் வாசித்தல், பாடப்புத்தக பயிற்சி, சூழ்நிலை கல்வி போன்றவைகள் மூலம் கற்றல் திறனை அதிகப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வெள்ளகோவில் வட்டார கல்வி அலுவலகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News