உள்ளூர் செய்திகள்

மஞ்சள்.

பொங்கல் பண்டிகை - அறுவடைக்கு தயாராகும் மஞ்சள்

Published On 2022-12-12 04:36 GMT   |   Update On 2022-12-12 04:36 GMT
  • பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம்.
  • ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

குடிமங்கலம்:

அறுவடைதிருநாளான பொங்கல் பண்டிகையின் போது விளைந்தும் விளையாத நிலையிலுள்ள பச்சை மஞ்சளை செடியுடன் கொத்தாக பொங்கல் பானையில் கட்டும் பழக்கம் உள்ளது. இதனாலேயே பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்புக்கு இணையான இடத்தை மஞ்சள் கொத்து பிடிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் சாகுபடியில் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பொங்கலன்று முக்கிய இடம் பிடிக்கும் மங்கலப் பொருளான மஞ்சள் கொத்து சாகுபடி விவசாயிகளுக்கு மன நிறைவைத் தருகிறது. பெரும்பாலும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். உணவுக்காகவோ மற்ற பயன்பாட்டுக்காகவோ மஞ்சள் உற்பத்தி செய்யும்போது சுமார் 9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதேநேரத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கொத்து உற்பத்தி செய்வதற்காக ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டால் மார்கழி கடைசியில் அறுவடை செய்து விடலாம். வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதேநேரத்தில் நல்ல வருவாயும் தரக்கூடியதாக மஞ்சள் சாகுபடி உள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினார்.

Tags:    

Similar News