உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி

திருப்பூர் மருத்துவ கல்லூரியில் 1-ந்தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

Published On 2023-08-10 10:13 GMT   |   Update On 2023-08-10 10:13 GMT
  • கடந்த 2021ம் ஆண்டு முதல் திருப்பூரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
  • நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் ஜூலை 25-ந்தேதி துவங்கியது.

திருப்பூர்:

கடந்த 2021ம் ஆண்டு முதல் திருப்பூரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதுவரை 2 பேட்ஜ் மாணவர்கள் (200 பேர்) மருத்துவ படிப்பில் இணைந்து மருத்துவபடிப்பு பயின்று வருகின்றனர்.நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் ஜூலை 25-ந்தேதி துவங்கியது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 7.5 சதவீத ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்று திருப்பூர் மருத்துவக் கல்லுாரியை 100பேர் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் நாளை 11-ந்தேதிக்குள் கல்லூரியில் இணைய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News