உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் வடுகபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-27 07:09 GMT   |   Update On 2023-05-27 07:09 GMT
  • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம், ராயல் ஆர்கெஸ்ட்ரா இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • கும்பாபிஷேக விழாவை ஜோதிலிங்க குருக்கள், கார்த்திகேய சிவாச்சாரியார் உள்ளிட்ட அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

பல்லடம்:

பல்லடம் வடுகபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இதற்கிடையே கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியோர்கள்,பொதுமக்கள் முடிவு செய்தனர். இதன்படி கடந்த 24-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு,குபேர லட்சுமி யாகம், யாகசாலை பிரவேசம், உள்ளிட்ட யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், கோபுர கலச ஊர்வலம் நடைபெற்றது.

அன்று மாலை இரண்டாம் கால பூஜை, கும்ப அலங்காரம், மகாலட்சுமி யாகம், நவகிரக யாகம் மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து 25ந் தேதி காலை மூன்றாம் கால யாக பூஜை உடன் துவங்கி, கோ பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, நவகாளி அர்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்று, காலை 9 மணிக்கு பெரிய விநாயகர், மாகாளியம்மன், துர்க்கை அம்மன், வள்ளி,தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர், காலபைரவர் உள்ளிட்ட மூலாலய மூர்த்திகள், கோபுர கலசங்கள், ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ,மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம், ராயல் ஆர்கெஸ்ட்ரா இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து 2 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவை ஜோதிலிங்க குருக்கள், கார்த்திகேய சிவாச்சாரியார் உள்ளிட்ட அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் முருகசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் குருமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் திண்டு பாலு மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News