உள்ளூர் செய்திகள்

பிரம்ம கமலம் பூக்களை ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

பிரம்மகமலம் பூக்களை ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்.

Published On 2022-08-29 11:32 GMT   |   Update On 2022-08-29 11:32 GMT
  • உடுமலை கே. சி. பி. நகரில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரமகமலம் பூ பூத்துள்ளது.
  • அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் பார்த்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை மலையாண்டிபட்டினம் கே. சி. பி. நகரில் மலர்விழி என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரமகமலம் பூ பூத்துள்ளது.

அருகில் உள்ளவர்கள் ஆர்வமுடன் பார்த்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதை நிஷா கந்தி என்றும் அழைப்பர். சிவனுக்கு உகந்த தெய்வீக மலர் என்பதால் இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இது இரவு 7 மணி அளவில் பூக்கத் தொடங்கி அதிகாலை இரண்டு மூன்று மணியளவில் சுருங்கிவிடும். வெண்மை நிற இதழ்களுடன் கூடிய அந்த பூ உள்ளே நாகம் படுத்திருப்பது போல் காணப்படும். இந்த பூவை காயவைத்து பவுடராக்கி சாப்பிட்டால் பல்வேறு நோய்கள்தீரும் என தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News