உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

பல்லடத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-30 04:39 GMT   |   Update On 2022-09-30 04:39 GMT
  • ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி.
  • வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லடம் :

பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பிரிவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பச்சாபாளையம், பனப்பாளையம்,ராயர்பாளையம்,நடுப்புதூர், அபிராமி நகர்,கரையாம்புதூர் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நகராட்சி 7வது வார்டு கவுன்சிலர் கனகுமணி துரைகண்ணன், நகர அ.தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி. நகர அவைத்தலைவர் தமிழ்நாடு பழனிசாமி, நகர துணை செயலாளர் லட்சுமணன்,மற்றும் துரைகண்ணன், ரமேஷ், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்ச்சுணன், பா.ஜ.க.சார்பில் கிருஷ்ணபிரசாத், அண்ணாதுரை, பா.ம.க.சார்பில் காளியப்பன், முன்னவன்,பாஸ்கரன், பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அய்யாசாமி,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News