உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

சேவூர் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது

Published On 2022-11-28 06:57 GMT   |   Update On 2022-11-28 06:57 GMT
  • விழாவுக்கு வருவோரை வரவேற்று இஸ்லாமிய நண்பர்கள் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
  • முன்னுதாரணமாக திகழ்கிறது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் கிராமம்.

அவினாசி : 

மதங்களை கடந்த மனித நேயத்தால் மட்டுமே, அமைதியான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக, பல இடங்களில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம் உட்பட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள், நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் கிராமம். இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், இரு சமுதாயத்தினரும், பல தலைமுறைகளாக உறவினர் போன்று வாழ்ந்து வருகின்றனர். தலைமுறை பல கடந்தும், இருதரப்பினரும் பரஸ்பரம், தங்களை மாமா, மாப்பிள்ளை என உறவுமுறை சொல்லியே அழைக்கின்றனர்.

அப்பகுதியிலுள்ள பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. விழாவுக்கு வருவோரை வரவேற்று இஸ்லாமிய நண்பர்கள் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News